close
Choose your channels

'நம்ம வீட்டு பிள்ளை' நாயகிக்கு கிடைத்த மெகா பட்ஜெட் பட வாய்ப்பு!

Monday, October 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தகவலை சமீபத்தில் பார்த்தோம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது மேலும் ஒரு நாயகி இணைந்துள்ளார். விஷால் நடித்த ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் நாயகியாக நடித்த அனு இமானுவேல் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தாலும் இருவருக்கும் சம அளவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘மகா சமுத்திரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அஜய்பூபதி என்பவர் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.