'நம்ம வீட்டு பிள்ளை' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்ட்ராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'எங்க அண்ணே' மற்றும் 'மைலாஞ்சி'ஆகிய இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வந்துள்ளது

இந்த படத்தின் பாடல்கள் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். டி.இமான் - சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் வெளிவந்த அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்களும் பிரபலம் ஆகும் என்று கருதப்படுகிறது

சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன், ரமா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

More News

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிக்கு அடுத்து திரையுலகில் முதலிடத்தில் விஜய் தான் இருப்பார்

உலகின் முதல் மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியன் ரயில்வே அசத்தல்

நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அதிநவீன சிகிச்சையை அளிக்கும் உலகின் முதல் மருத்துவ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்

நீ போயிட்டா நான் ஜாலியா இருப்பேன்! ஷெரினை கலாய்க்கும் தர்ஷன்

கடந்த சில வாரங்களில் அனேகமாக கவின், லாஸ்லியா இல்லாத புரமோஷன் வீடியோ இன்று வெளிவந்துள்ள முதல் வீடியோவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த புரமோவிலும் ரொமான்ஸ் தான் உள்ளது

'விஸ்வாசம்' படத்தின் பாடலுக்கு தமிழக அமைச்சர் பாராட்டு!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலுக்கு தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் டப்பிங் முடித்துவிட்டு லண்டன் பறந்த தனுஷ்!

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள