close
Choose your channels

பக்கா சிறப்பான தரமான சம்பவம்: 'தலைவர் 168' படத்திற்கு பிரபல நடிகர் வாழ்த்து!

Friday, October 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டது என்பதை பார்த்தோம். சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் ‘தலைவர் 168’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘நம்ம வீட்டு பிள்ளை’ இயக்குனர் பாண்டிராஜ், ஹீரோ சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சூரி ஆகியோர் ‘தலைவர் 168’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் தங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

’தலைவர் 168’ படம் ’வேற லெவலில் இருக்கும்’ என இயக்குனர் பாண்டிராஜூம், ’பக்கா சிறப்பான தரமான சம்பவம்’ என சிவகார்த்திகேயனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர்களின் மாபெரும் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள் என சூரியும், தங்களது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.