ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன 'நண்பன்' பட நடிகை: வைரலாகும் செல்பி வீடியோ

  • IndiaGlitz, [Monday,May 09 2022]

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘நண்பன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆளே அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்டுள்ள செல்பி வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது .

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்த ’சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுயா. அதன்பிறகு ’மதுரை சம்பவம்’ ’நகரம்’ ’நஞ்சுபுரம்’ ’நண்பன்’ ‘நான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அனுயா சமீபத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் ’சிவா மனசுல சக்தி’ படத்தில் நாங்கள் ரசித்த அனுயாவா இவர்? என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் நபராக நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார் என்பதும் அதற்குப் பின்னர் அவர் அளித்த பேட்டியில் தனக்கு தமிழ் சரியாக பேச வராததால் அந்த நிகழ்ச்சியில் தன்னால் நீடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கணவரை பிரிந்து மனவேதனையில் இருக்கின்றேன்: பிரபல சீரியல் நடிகை!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தனது கணவரை பிரிந்து மனவேதனையில் இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சாய்பல்லவி அளித்த சர்ப்ரைஸ்!

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அளித்துள்ளார் .

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய சமந்தா!

 பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தாவின் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில் இந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .