close
Choose your channels

சிபிராஜின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ், சமீபகாலமாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் ’மாயோன்’, ’வால்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கன்னடத்தில் வெற்றி பெற்ற ’காவுல்தாரி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’புலி’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு சைமன்கிங் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.