'நன்றி மாமே'.. த்ரிஷாவின் பதிவுக்கு குவியும் லைக்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை த்ரிஷா, அஜித் உடன் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, ரசிகர்களுக்கு நன்றி என்று பதிவு செய்துள்ளார். இதோடு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். தற்போது அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அஜித், த்ரிஷா நடிப்பில் , ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
’மங்காத்தா’ படத்திற்கு பிறகு, ரசிகர்களுக்காக முழுக்க முழுக்க ஒரு படத்தை ஆதித் ரவிச்சந்திரன் வழங்கியுள்ளார். அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும் அவரே இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவின் நடிப்புக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை அடுத்து, அவர் ’குட்பேட் அக்லி’ படத்தின் சில காட்சிகள் மற்றும் ஆதிக், பிரபுவுடன் எடுத்த புகைப்படங்கள், சில செல்பிகளை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவுக்கு "நன்றி மாமே" என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கருத்துகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments