'96' தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,September 11 2018]

முதல்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படமான '96' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்த டீசரில் விஜய் சேதுபதி – த்ரிஷா இருவரும் படத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒலிக்கும் பாடல் அவர்கள் பேச விரும்புவதை அப்படியே நமக்கு புரிய வைத்ததே இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம்.

விஜய்சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ பெற்றுள்ளதாகவும், இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் விஜய்சேதுபதி கேரக்டரில் நானியும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என தெரிகிறது.

'96' படத்தில் வைல்ட்லைப் போட்டோகிராபர் கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் 16, 36 மற்றும் 96 வயதில் உள்ள காதல் குறித்த கதையம்சம் கொண்டது என கூறப்படுகிறது.

More News

ஜோதிகாவின் புதிய படத்தின் இயக்குனர் அறிவிப்பு

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் பெற்ற வெற்றியால் அதன்பின்னர் பாலாவின் 'நாச்சியார்' உள்பட ஒருசில திரைப்படங்களில் ஜோதிகா நடித்தார்

ஹீரோவாக நடிப்பது உண்மையா? யோகிபாபு விளக்கம்

நல்ல மார்க்கெட்டில் இருக்கும் காமெடி நடிகர்கள் திடீரென ஹீரோவாக ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் கூட ஒரு முன்னணி காமெடி நடிகர் ஹீரோ ஆசையினால் காணாமல் போனதை கோலிவுட் அறியும்

சென்றாயன் எவிக்சனில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் செண்ட்ராயன் வெளியேறியதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கும் பலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

ஓட்டுக்கு பணம்: தேர்தலில் அல்ல, பிக்பாஸ் நிகழ்ச்சியில்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஐஸ்வர்யா எப்படி காப்பற்றப்பட்டார் என்ற புதிருக்கு பலருக்கு விடை கிடைக்கவில்லை. ஐஸ்வர்யாதான் வெளியேற 99% வாய்ப்பு இருந்த நிலையில்

25 வருடம் செக்யூரிட்டி வேலை பார்த்த கே.பாலசந்தர் நாயகி

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரமிளா.