என்ன ஆனாலும் சரி, மொத்த பேரையும் கொத்தா தூக்கிருவேன்.. நானி - கீர்த்தி சுரேஷின் 'தசரா' டீசர்

  • IndiaGlitz, [Monday,January 30 2023]

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்த ‘தசரா’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நானிக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தும் என இந்த டீசரிலிருந்து தெரிய வருகிறது. அல்லு அர்ஜுனுக்கு ’புஷ்பா’ போல் நானிக்கு ஒரு ’தசரா’ என ரசிகர்கள் இந்த டீசரை பார்த்து கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

நானி, கீர்த்தி சுரேஷ் முக்கிய இடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் நவீன் நூலில் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 30ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.