ரஜினி-அஜித்துடன் போட்டி போட தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் 'பேட்ட' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்துடன் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத் நடித்த 'எல்.கே.ஜி' படத்தையும் வெளியிட திட்டம் இருந்ததாகவும், ஆனால் அதனை தான் தடுத்துவிட்டதாகவும் நாஞ்சில் சம்பத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ரஜினிகாந்திற்கென மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. அவர்கள் பேட்ட படத்தினை வெற்றி பெற வைக்க முயற்சிப்பார்கள். அதுமட்டுமின்றி பேட்ட படத்தில் விஜய்சேதுபதி இருக்கிறார். அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் வளர்ந்து வருகின்றனர். இளம்தலைமுறையினை விஜய்சேதுபதி தன்வசப்படுத்தியிருக்கிறார். மேலும் சுப்ரமணியபுரம் சசிக்குமார் நடிக்கிறார். அவருக்கும் தனி ரசிகர் வட்டம் உள்ளது. இதனால் பேட்ட பொங்கலுக்கு வேட்டையாடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமின்றி பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாகவுள்ளது. நடிகர் அஜித்தை விஸ்வாசத்துடன் நேசிக்கும் தம்பிகள் தமிழகத்தில் மிக அதிகம். அதுமட்டுமல்ல அஜித் அவர்களுக்காக தலை கொடுக்கவும் தயாராகவுள்ள தம்பிகளை நான் பார்த்திருக்கிறேன். அதனால் விஸ்வாசமும் வெற்றிச் சமவெளிக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

ஆர்.ஜே.பாலாஜியும் நானும் நடித்த எல்.கே.ஜி படத்தை பொங்கலுக்கு கொண்டு வரலாம் என்ற திட்டம் இருந்தது. நான்தான் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களின் படம் வெளியாகவுள்ள நிலையில், அதோடு போட்டி போட நமக்குத் தகுதியில்லை. ஆகவே அந்த படங்கள் வெளியான பின்பு நமது படத்தை வெளியிடுவோம் என்னும் ஆலோசனையை ஆர்.ஜே.பாலாஜியிடம் கூறினேன். அப்படித்தான் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்' இவ்வாறு நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 

More News

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' குறித்த முக்கிய தகவல்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாகவும்,

தமிழக அரசின் உத்தரவால் 'பேட்ட', விஸ்வாசம்' படங்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.

'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக உள்ளார்.

சென்னையில் பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்து

திரையுலக நட்சத்திரங்கள் அவ்வப்போது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஒரு பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

'என் பேட்டையில எவனும் விஸ்வாசமா இல்லை': சாருஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.