புதிய கல்விக்கொள்கை: சூர்யாவுக்கு பிரபல அரசியல்வாதி ஆதரவு

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்தாலும் முக்கிய அரசியல்வாதிகள் யாரும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் கூட சூர்யாவின் இந்த கருத்தை கண்டுகொள்ளவில்லை என்பது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

மாறாக ஒரு சில அரசியல்வாதிகள் சூர்யாவின் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச் ராஜா மற்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்ததால் சூர்யாவின் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சூர்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தம்பி சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் அப்பாவி மக்களின் கல்விக்கு உதவுகிற நீ .. தகரச்சட்டங்களை பொருட்படுத்தாதே. சிகரங்களை நோக்கிய உன் பயணத்தை தகரங்களின் சத்தங்கள் எதுவும் செய்துவிடாது.

புதிய கல்விக் கொள்கையை கேள்வி கேட்கிறத் தகுதி எல்லோரையும் விட உனக்கு அதிகமாகவே இருக்கிறது. உன்னை கேள்வி கேட்கத்தான் எவனுக்கும் தகுதி இல்லை.

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கு அரசியல்வாதிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருவதால் இதுகுறித்து தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

More News

நயன்தாரா திருமணம் எப்போது? உலகக்கோப்பையை கணித்த ஜோதிடர் கருத்து!

நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தற்போது நயன்தாரா திருமணம் குறித்தும் கணித்துள்ளார்.

செய்யறதையும் செஞ்சிட்டு சாரியா கேட்குற? கவினை எகிறிய மீரா

பிக்பாஸ் வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணமானவரான மீரா மிதுன், ஒவ்வொரு நாளும் ஒருவரை குறிவைத்து பிரச்சனையை இழுத்து அன்று முழுவதும் அனைவரும் தன்னைப்பற்றியே

கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது தெரிந்ததே

'நேர் கொண்ட பார்வை' படத்தின் புத்திசாலித்தனமான ரிலீஸ் தேதி!

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை அறிவிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்தார் என்று வெளிவந்த

அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் சூர்யா: அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

நடிகர் சூர்யா நேற்று புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய, மாநில அரசுகளை காட்டமாக விமர்சித்த நிலையில் ஏற்கனவே அவரை பாஜக தலைவர்களான எச்.ராஜா மற்றும் தமிழிசை செளந்திரராஜன்