close
Choose your channels

பாஜகவை பங்கமாய் கலாய்த்த வனிதா: நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Saturday, July 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வனிதா திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் உள்பட பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த கருத்துகளுக்கு நடிகை வனிதா ஆவேசமாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் என நுழைந்தவர் நடிகர் நாஞ்சில் விஜயன். இவரும் அவ்வப்போது வனிதா திருமணம் குறித்து தனது கருத்துக்களை சமூக வலை தளங்களில் தெரிவித்து வந்ததும் அவருக்கும் வனிதா பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் தற்போது வனிதா பாஜக குறித்து பேசிய ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் வனிதா கூறியதாவது: பாஜகவிற்கு விஜயகுமாரின் ஆதரவு தேவை என்றும், பாஜகவில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் பத்து பேர்களில் விஜயகுமார் ஒரு முக்கியமான நபராக உள்ளார் என்றும், அதனால் பாஜகவினர் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றார்கள் என்றும், விஜயகுமாரை வைத்துதான் பாஜக தமிழகத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்றும் பங்கமாய் கலாய்த்துள்ளார். இதற்கு பாஜக தரப்பில் இருந்து என்ன ரியாக்சன் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.