கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 01 2018]

கார்த்திக் நரேன் இயக்கிய 'துருவங்கள் 16' படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய 'நரகாசுரன்' திரைப்படம் சமீபத்தில் சென்சார் சென்று 'யூஏ' சான்றிதழ் பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின்போது இந்த படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நாயகன் அரவிந்தசாமி, இதுவொரு முழுக்க முழுக்க கார்த்திக் நரேன் படம் என்றும், இந்த அளவில் அவருக்கு இருக்கும் மேக்கிங் திறமை மற்றும் மெச்சூரிட்டியை பார்த்து வியந்ததாகவும் கூறினார்.

அரவிந்தசாமி, ஸ்ரேயா சரண், இந்திரஜித், சந்தீப் கிஷான் ஆத்மிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் இசையமைத்துள்ளார். சுஜித் சரங் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் கார்த்திக் நரேனின் முதல் படம் போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சவால் வேண்டாம்: நடிகைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் உலக டிரெண்டில் இருப்பது Kiki challenge என்று கூறப்படும் ஒரு சேலஞ்ச். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் போல் வைரலாகி வரும்

காவேரி மருத்துவமனையில் விஜய்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஐந்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அராஜகத்தின் உச்சகட்டத்தில் ஐஸ்வர்யா: என்ன செய்ய போகிறார் கமல்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐம்பது நாட்களை தொடப்போகின்றது. ஆனால் இன்று வரை இந்த நிகழ்ச்சி மக்களின் மனதை கவரவில்லை.

அது பசுமை வழிச்சாலை அல்ல. பசுமை அழிப்புச் சாலை: அறிமுக இயக்குனர் ஆவேசம்

இயக்குனர் மங்களேஷ்வரன் தற்போது பேசப்பட்டு வரும் 8 வழி பசுமை சாலை குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கையை அழித்துவிடக்கூடாது

ஹரிஷ்கல்யாண்-ரைசா படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடியாக நடித்த 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து