கொட்டிக்கிடக்கும் தங்கம்… “கோல்ட்மைன்“ பற்றி ஆராயும் நாசா விஞ்ஞானிகள்!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

 
பூமியில் இருந்து 200 மில்லியன் தொலைவில் இருக்கும் “சைக்கி“ எனும் சிறுகோளில் கணக்கே இல்லாத அளவிற்கு தங்கம் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் “கோல்ட்மைன்” என அழைக்கப்படும் அந்த சிறுகோளைப் பற்றி தற்போது நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் எண்ணற்ற கனிம வளங்கள் நிறைந்து கிடக்கிறது. அந்த வகையில் தங்கம் அதிகமாகக் காணப்படும் சிறுகோள் ஒன்றை இத்தாலிய விஞ்ஞானிகள் கடந்த 1852 மார்ச் 17 ஆம் தேதி கண்டுபிடித்துள்ளனர். மேலும் கிரேக்க கடவுளைக் குறிக்கும் வகையில் இந்த கோளிற்கு “சைக்கி“ எனப் பெயரும் வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையே உள்ள சுற்றுவட்டப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் இந்த கோல்ட்மேன் சிறிய கோளை பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த கோளில் மட்டும் 10,000 குவாட்ரில்லியன் அளவிற்கு தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு குவாட்ரில்லியனுக்கு 1 என்ற எண்ணிற்குப் பின்னால் 15 பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி கணக்கே இல்லாத அளவிற்கு சைக்கி கிரகத்தில் தங்கம் கொட்டி கிடக்கிறது. இதில் ஒருசிறு துண்டை எடுத்து வந்தால்கூட அது பில்லியன், டிரில்லியன் கணக்கில் விலைபோகும் என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 260 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சைக்கி கிரகத்தில் தங்கத்தைத் தவிர இரும்பு போன்ற பிற உலோகங்கள் நிறைந்து இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சூரிய மண்டலத்தை உருவாக்கும்போது ஏற்பட்ட மோதலின் காரணமாக உலோகம் நிறைந்த ஏதோ ஒரு கிரகத்தில் இருந்து இந்த “சைக்கி“ சிறுகோள் பிரிந்து வந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கோல்ட்மைன் பற்றி நாசா மேற்கொள்ளும் ஆய்வுத்திட்டத்திற்கு இந்தியாவை சேர்ந்த கல்யாணி சுகத்மே என்பவர் மேலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.