close
Choose your channels

சச்சின், தோனிக்கு கிடைத்த அதே வாய்ப்பு: ஆனால் மறுப்பு தெரிவித்த நடராஜன்!

Tuesday, February 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோர்களுக்கு கிடைத்த வாய்ப்பு தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கும் தேடி வந்த நிலையில் அந்த வாய்ப்பை அவர் மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கிரிக்கெட்டில் பெரும் சாதனை செய்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் இந்த திரைப்படங்கள் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தன்னுடிய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க ஒருசில இயக்குனர்கள் தனது வீடு தேடி வந்ததாகவும் ஆனால் தற்போது தனக்கு வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லை என்றும் கிரிக்கெட்டில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த இருப்பதாகவும் நடராஜன் அவர்களுக்கு பதிலாக கூறி மறுத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்

ஒரு கிராமத்து ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் தனது திறமை மற்றும் விடாமுயற்சியால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால், அவரை போல் கோடிக்கணக்கில் கிரிக்கெட் கனவுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையாக அந்த திரைப்படம் இருக்கும் என கருதப்படுகிறது. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் நடராஜனின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.