close
Choose your channels

'ஜெயிலர்' படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. விமானத்தில் செல்பி எடுத்த தேசிய விருது நடிகை..!

Thursday, March 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற நிலையில் விமானத்தில் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். அவர் கொச்சிக்கு விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் பயணம் செய்த தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி ரஜினியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ என்றா திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலகிருஷ்ணா சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos