'ஜெயிலர்' படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. விமானத்தில் செல்பி எடுத்த தேசிய விருது நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,March 23 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பிற்காக கொச்சி சென்ற நிலையில் விமானத்தில் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட தேசிய விருது பெற்ற நடிகையின் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’ஜெயிலர்’.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி சென்றார். அவர் கொச்சிக்கு விமானத்தில் சென்றபோது அதே விமானத்தில் பயணம் செய்த தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி ரஜினியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதுகுறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடித்த ’சூரரை போற்று’ என்றா திரைப்படத்தில் நடிகை அபர்ணா பாலகிருஷ்ணா சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிகில்' படத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல ஹீரோ.. 'லியோ' அப்டேட்..!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் மீண்டும் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட்: முதல் நாளே லாபம்..!

தமிழ் திரையுலகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில்

சிம்புவின் 'பத்து தல' சென்சார் தகவல்.. மார்ச் 30ல் ரிலீஸ்..!

 சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த அறிவிப்பை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

மகேஷ்பாபுவின் மகளா இவர்? பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் சூப்பர் வீடியோ..!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் பாவாடை தாவணியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

திவாலான அமெரிக்க வங்கியால் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்: பிரபல நடிகை..!

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்ற வங்கி சமீபத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வங்கியால் தான் கோடி கணக்கான பணத்தை இழந்து விட்டேன் என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது