தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

தனுஷ் தற்போது ஹாலிவுட் படமொன்றில் நடித்து வருகிறார் என்பதும் இதனை அடுத்து அவர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்கும் படத்திலும் வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற தனுஷூம் தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைய இருப்பது இந்திய திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை நாராயணதாஸ் நரங் என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

முட்டாள் தனமான தம்பதி....! கட்டைப்பையில் இறந்த பச்சிளம் குழந்தை...!

பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதால், பரிதமாக உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் ஏற்பட்டுள்ளது.

ராஜீவ் வழக்கில் கைதானவர்களுக்கு, வீடியோ கால் பேச அனுமதி....!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள், உறவினர்களுடன் வீடியோ காலில் பேச உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

"என்பேரு மாணிக்கம்,எனக்கு இன்னொரு பேரு இருக்கு".... மோசடி மதன்...! யுடியூபரின் தில்லாலங்கடி வேலைகள்....!

ஆபாச மதன் கடந்த சில மாதங்களுக்கு, ஆடம்பர ஹோட்டல் ஒன்றை நடத்தி அதில் பல மோசடிகள் செய்துள்ளதாக, விசாரணையில் அவன் மனைவி தெரிவித்துள்ளார்.

பாபாவை தூக்கில் போடுங்கள்.....! கடுப்பாகி டுவிட் போட்ட பிரபல நடிகை...!

சிவசங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள் என நடிகை காஜல் பசுபதி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன்: கமல்ஹாசன் அறிக்கை

கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளை புறக்கணித்து வந்தார்கள் என்றும், இன்று சூழல் மாறி மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள் என்றும்,