நட்புக்கு டைட்டிலில் மரியாதை கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி!

  • IndiaGlitz, [Wednesday,November 07 2018]

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த பட டைட்டில் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு 'நட்பே துணை' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். டைட்டில் போலவே அவரது நட்பு வட்டாரங்கள் இந்த படத்தில் பணிபுரிகின்றனர். நட்புக்கு டைட்டிலிலேயே மரியாதை செய்துள்ள இந்த படத்தை சுந்தர் சியின் அவ்னி மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பார்த்திபன் தேசிங்கு என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார். வித்தியாசமான கேரக்டரில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் இந்த படம் நட்பு மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருகிறது.