close
Choose your channels

அருண்காமராஜின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் படமான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிரிக்கெட் மற்றும் விவசாயம் இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து அவர் இயக்கிய இந்த படத்தை அவருடைய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் அருண்காமராஜா நடித்த திரைப்படமான 'நட்புன்னா என்னனுக்கு தெரியுமா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் முடிந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கவின், ரம்யா நம்பீசன், ராஜூ ஜெயமொகன், அருண்ராஜா காமராஜா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சிவகுமார் அரவிந்த் இயக்கியுள்ளார். தரண் இசையமைப்பில் சிவகுமார் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.