பாஜகவில் இணைந்த பிரபல வில்லன் நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

நாட்டாமை, முத்து, துள்ளாத மனமும் துள்ளும், முகவரி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்த இவர் தற்போது அரசியலிலும் நுழைந்துள்ளார்.
இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்ட பொன்னம்பலம், பாஜகவின் அடிப்படை உறுப்பினார் ஆனார்.
ஏற்கனவே பாஜகவில் விசு, காயத்ரி ரகுராம், கங்கை அமரன் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது பொன்னம்பலமும் பாஜகவில் இணைந்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பயிற்சி வீடியோவுக்கு பதில் பாலியல் வீடியோ: விசாரணைக்கு உத்தரவிட்ட பி.எஸ்.எப்

எல்லை பாதுகாப்பு படை என்று அழைக்கப்படும் பி.எஸ்.எப் வீரர்களுக்கு அவ்வப்போது வீடியோ மூலம் பயிற்சி அளிப்பது வழக்கம்.

தினசரி பெட்ரோல்-டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி?

நாளை மறுநாள் முதல் அதாவது ஜூன் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் சர்வதேச சந்தை நிலவரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்வது எப்படி? என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது...

ஆர்.கே.சுரேஷின் புதிய பட டைட்டில் அறிவிப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், அதன் பின்னர் 'மருது', 'தர்மதுரை', ஆகிய படங்களில் நடித்தார்...

சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் திடீர் கைது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இன்று பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் கூடியது. இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது...

இன்று முதல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இன்னும் பத்து நாட்கள் பேட்ச்வொர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...