4 கதாநாயகிகள்...சைக்கோ திரில்லர் கதை....! படத்தில் இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்....!

ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர், ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் தான் நட்டி என்கிற நடராஜ். இவர் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

அந்தவகையில் தற்போது 4 கதாநாயகிகள் நடிக்கும், சைக்கோ திரில்லர் படத்தில் நட்டி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இயக்குனர் ஹாரூன் இப்படத்தை இயக்க, ட்ரீம் ஹவுஸ் சார்பாக வி.எம்.முனிவேலன் படத்தை தயாரிக்கிறார். கதாநாயகிகள் தேர்வு நடந்து வரும் சூழலில், முக்கிய கதாபாத்திரங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி உள்ளிட்டோர் நடிக்க தேர்வாகியுள்ளனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் துவங்கியுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

மரவள்ளித்தோப்பில் தனிமை ..! தட்டிக்கேட்ட கணவன் கொலை.....!

கள்ளக்காதலனும், மனைவியும், கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடலூரில் அரங்கேறியுள்ளது.

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: திரையரங்குகள் திறக்க அனுமதியா?

தமிழகத்தில் ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதை அடுத்து ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஷங்கர்-ராம்சரண் தேஜா படத்தின் வில்லன் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக

நேரத்தை நிறுத்த முடியாது, ஆனால் நேரம் நம்ம எங்க வேணும்னாலும் நிறுத்தும்: அருள்நிதியின் 'டைரி' டீசர்

தமிழ் திரை உலகில் தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடித்த மௌன குரு உள்பட பல படங்கள் வெற்றிப்படங்கள்

சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் இரண்டு ஹாட் அப்டேட்ஸ்: இதுவரை வெளிவராத தகவல்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள 'வாடிவாசல்' திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்