close
Choose your channels

'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவான உருவான ஆந்தாலஜி திரைப்படம் ’நவரசா’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூர்யாவின் ரொமான்ஸ் காட்சிகள், விஜய் சேதுபதியின் ஆக்ரோஷமான காட்சிகள், அரவிந்த்சாமியின் அதிரடி காட்சிகள், அதர்வாவின் ஆக்சன் காட்சிகள் என டிரைலரே அட்டகாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதிகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த டிரைலருக்கு பின் நவரசா ஆந்தாலஜி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர் மற்றும் நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 எபிசோடுகள் தான் ’நவரசா’ எனும் ஆந்தாலஜி வெப்தொடர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.