'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்!

  • IndiaGlitz, [Tuesday,July 27 2021]

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் நடிப்பில் உருவான உருவான ஆந்தாலஜி திரைப்படம் ’நவரசா’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக சூர்யாவின் ரொமான்ஸ் காட்சிகள், விஜய் சேதுபதியின் ஆக்ரோஷமான காட்சிகள், அரவிந்த்சாமியின் அதிரடி காட்சிகள், அதர்வாவின் ஆக்சன் காட்சிகள் என டிரைலரே அட்டகாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதிகள் பதிவு செய்து வருகின்றனர். இந்த டிரைலருக்கு பின் நவரசா ஆந்தாலஜி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர் மற்றும் நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 எபிசோடுகள் தான் ’நவரசா’ எனும் ஆந்தாலஜி வெப்தொடர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

More News

இந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்!

திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய குழந்தை கால புகைப்படங்களையும் பள்ளிகால புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் அந்த க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களை

திடீர் நிலச்சரிவு… நொடிப்பொழுதில் பாலத்தையே விழுங்கிய கோரக் காட்சி!

இந்தியா முழுக்கவே பல மாநிலங்களில் தற்போது கனமழை பெய்துவருகிறது. அந்த வகையில் தற்போது இம்மாச்சல்

உலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை!

ஒரு உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டி நடைபெறும்போது அதற்கான பதக்கங்களை செய்வதில் அந்தக் குழு அதீத அக்கறை எடுத்துக் கொள்ளும்.

செங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்!

இங்கிலாந்தைச் சார்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு பாலியல் உறவில் ஈடுபட்டபோது அவருடைய ஆணுறுப்பு செங்குத்தாக உடைந்துள்ளது.

பெரிய இடுப்புக்காக அசால்ட்டா அறுவைச் சிகிச்சை செய்யும் பெண்கள்… அதிர்ச்சித் தகவல்!

அழகுக்காக இளம்பெண்கள் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதைப் பற்றி கேள்விபட்டு இருப்போம்.