close
Choose your channels

பிரபல தயாரிப்பாளரை வஞ்சப்புகழ்ச்சி செய்த இயக்குனர் நவீன்!

Monday, March 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே சதீஷ்குமார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் இவர் சுமார் 20 திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளராக மட்டுமன்றி ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் குணசித்திர வேடத்திலும் ஜே.சதீஷ்குமார் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடித்து வரும் ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய் நடித்து வரும் ’அக்னி சிறகுகள்’ என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் ஜே.சதீஷ்குமார் நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் அவரது நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் கொஞ்சம் படமாக்கப்பட வேண்டிய நிலையில் அவர் கால்சீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஜே.சதீஷ்குமாருக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் வஞ்சப் புகழ்ச்சியில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது: இன்று படுபிசியான நடிகராக உருவெடுத்திருக்கும் ஜே.சதீஷ்குமார் எங்களுடைய ’அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பிற்கு தேதி கொடுக்க முடியாமல் தினமும் ஒரு ஷூட்டிங்கிற்கு பறந்துகொண்டிருக்கிறார். தயாரிப்பாளராக வெற்றிக்கொடி நாட்டிய தாங்கள் நடிகராக விஸ்வரூபமெடுப்பதில் மிக்க மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.