close
Choose your channels

வாய்ப்புகளை மறுத்த நடிகை....! சரியாக பயன்படுத்திய நயன்... அதுவும் சூப்பர் ஹிட் படங்களில்...!

Friday, June 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்து ஹிட் அடித்த இரு படங்களின் வாய்ப்பு, முதலில் தனக்கு வந்ததாக நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார், நயன்தாரா அறிமுகத்தில் நடித்தபடம் தான் ஐயா. இதைத்தொடர்ந்து நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாக, சந்திரமுகி படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான துவக்கத்திலே சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டாருடன் நடித்து, படங்களும் ஹிட் அடித்ததால் மிகவும் பிரபலமானார் நயன். ரசிகர்கள் பலர் மனதிலிலும் இடம்பிடித்த நயன், கேரளாவைச் சேர்ந்தவர்.

இந்த இரண்டு படங்கள் குறித்த நடிகை நவ்யா நாயர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

"இயக்குனர் ஹரியின் ஐயா படத்திலும், பி.வாசு அவர்களின் சந்திரமுகி படத்திலும், எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் மலையாள படங்களில் பிசியாக இருந்ததால், தமிழ் படங்களின் வாய்ப்புகளை மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

தமிழில் ராதாமோகன் இயக்கத்தில், நடிகர் பிரசன்னா கதாநாயகனாகவும், நவ்யா நாயர் கதாநாயகியாகவும் அறிமுகமாகி வெளியான திரைப்படம் தான் அழகிய தீயே. இதன்பின்பு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாச கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட ஒரு சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். பின் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இதே போல் நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நாயகியாக கொடி கட்டிப்பறக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காதலன் விக்னேஷ் சிவனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.