தனிமைப்படுத்தப்பட்ட 'பேட்ட' நடிகருக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய மனைவி

  • IndiaGlitz, [Tuesday,May 19 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் சமீபத்தில் தனது சொந்த கிராமத்திற்கு சென்றதால் 14 நாட்கள் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்தநிலையில் நவாசுதீன் சித்திக் மனைவி ஆலியா தற்போது விவாகரத்து கேட்டு சட்டரீதியிலான நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

45 வயதான நவாசுதீன் சித்திக் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து நவாசுதின் சித்திக் மனைவி ஆலியா தற்போது டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தபால் நிலையங்கள் இயங்காத காரணத்தால் இந்த நோட்டீசை அவர் வாட்ஸ்அப் மற்றும் இமெயிலில் அனுப்பி உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த நோட்டீசுக்கு குறிப்பிட்ட காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் சமீபத்தில் தனது சகோதரி காலமானதால் தனது 75 வயது தாயார் உட்பட குடும்பத்தினர் அனைவரும் மனமுடைந்து இருப்பதாகவும், நிம்மதிக்காக சொந்த ஊரில் இருப்பதாகவும் கூறிய நவாசுதீன் சித்திக், டைவர்ஸ் நோட்டீஸ் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை என்றும், இது தனது தனிப்பட்ட விஷயம் என்றும் கூறியுள்ளார்.
 

More News

பூமியில் மட்டுமல்ல; சூரியனிலும் லாக்டவுன்தான்!!! கடும் எச்சரிக்கை விடுக்கும் நாசா!!!

கொரோனா பாதிப்பினால் உலகமே தலைகீழாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அடுத்த வருடம் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்??? ஆருடம் சொல்லும் பொருளாதார வல்லுநர்கள்!!!

இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த பொருளாதார மந்தத்தை விடவும் 2021 இல் அதீத மந்தநிலை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கோல்ட்ஸ்மேன் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்

கொரோனா சிகிச்சை: மிகவும் நம்பப்பட்ட Remdesivir குறைந்த இரத்த அழுத்தத்தை தூண்டுகிறது!!! அதிர்ச்சி தகவல்!!!

அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சைக்கு Remdesivir மருந்தைப் பயன்படுத்தி அதிக நோயாளிகளை குணப்படுத்தியது.

ஜிகா, எய்ட்ஸை துரத்தி அடித்த ஒருநாடு, கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கிக் கொண்டது எப்படி??? கள நிலவரம்!!!

அரசமைப்பு உருவாகாத காலக்கட்டத்தில் ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ”அரசன் அன்றே கொல்வான்

சென்னையில் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் எவ்வளவு?

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து