close
Choose your channels

பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு' இந்தி ரீமேக்கில் 'பேட்ட' நடிகர்!

Sunday, January 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளைப் பெற்றது என்பது தெரிந்ததே.

ஒரே ஒரு நடிகர் மட்டுமே படம் முழுவதும் நடித்து அந்த படத்தை தயாரித்து இயக்குவது என்பது இவ்வுலகில் யாரும் இதுவரை செய்யாத சாதனை என்பதால் பார்த்திபனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ஒத்த செருப்பு’படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. பார்த்திபன் ஏற்று நடித்த கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழைப் போலவே ஹிந்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.