மாஸ் நடிகருடன் மீண்டும் இணையும் நயன்தாரா.. அதிகாரபூர்வ வீடியோ ரிலீஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா, ’மூக்குத்தி அம்மன் 2’ உள்பட 7 படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது மாஸ் நடிகருடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோவும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தற்போது ’மூக்குத்தி அம்மன் 2’, ’டாக்சிக்’ ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ’டியர் ஸ்டுடென்ட்ஸ்’, ’ராக்காயி’ உட்பட ஏழு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் வெளியாக உள்ளன.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நயன்தாரா நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரஞ்சீவியின் 157வது படமாக உருவாகும் இந்த படத்தை, பிரபல தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடி இயக்க உள்ளார்.
இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, புதிய வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை நயன்தாரா ஏற்கனவே சிரஞ்சீவியுடன் ’காட் பாத’ர், 'சைரா நரசிம்ம ரெட்டி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
An actress who effortlessly charms the masses and enchants the classes🫶
— Shine Screens (@Shine_Screens) May 17, 2025
The ever graceful queen, #Nayanthara joins the journey of #Mega157 ❤️🔥
Witness her elegance and emotion on the big screen alongside Megastar @KChiruTweets in an @AnilRavipudi Entertainer💥
—… pic.twitter.com/SWW06nkbyn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments