close
Choose your channels

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் த்ரில் படம்

Sunday, August 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'தர்பார்', மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்மரெட்டி, தளபதி விஜய்யின் 'பிகில் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் ஒரு த்ரில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது சொந்த பேனரில் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அவள்' என்ற படத்தை இயக்கிய மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார்.

இந்த படம் த்ரில் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்டது என்றும், இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடித்திராத ஒரு சவாலான கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த படத்தில் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.