அல்போன்ஸ் புத்திரன் அடுத்த படத்தில் நயன்தாரா? ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 18 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த தகவலை உறுதி செய்யப்பட்டால் பிரித்திவிராஜ் - நயன்தாரா ஜோடி முதல் முறையாக இணைந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் பிரித்திவிராஜ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

 

More News

மூடப்படாத விமானத்தில் 600பேர் பயணித்த காட்சி…நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படம்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கடந்த ஞயாற்றுக்கிழமை காலை தாலிபான்கள் கைப்பற்றிய உடனேயே ஆப்கன் மக்கள் தங்கள் தலைவிதி மாறிவிட்டதாகப் பீதி அடைந்தனர்.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி… இப்போதே துவங்கிவிட்ட திக்திக் நிமிடங்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் நேட்டா படை விலகிச்சென்ற பின்பு, வெறும் 10 தினங்களில் ஒட்டுமொத்த

தாடி வளர்க்கனும்… புர்க்கா வாங்கனும்… ஆப்கனில் இருந்து கதறும் மக்கள்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஏற்கனவே கடந்த 2001 வாக்கில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆட்சிபுரிந்துள்ளனர்.

சன் டிவி சீரியலில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல வில்லி நடிகை.....!

நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகக்கூடிய புதிய சீரியலில் நாயகியாக நடிக்கவுள்ளார்.

8 மணி நேரம் டிரெண்டிங்கில் இருந்த நடிகையின் பிறந்தநாள் ஹேஷ்டேக்: காரணம் இதுதான்!

பிரபல நடிகை ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த ஹாஷ்டேக் சமூகவலைதளங்களில் 8 மணி நேரம் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.