ஒரே நாளில் வெளியான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் படத்தின் அப்டேட்டுகள்.. இணையத்தில் வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தென்னிந்திய பிரபல நடிகைகளான நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களின் படங்கள் குறித்த அப்டேட்டை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒரே நாளில் வெளியிட்டுள்ளது.
மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "டெஸ்ட்" திரைப்படத்தை, சசிகாந்த் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதை படக்குழுவினர் விரும்பியிருந்தாலும், தயாரிப்பாளர் நேரடியாக நெட் ப்ளிக்ஸிற்கு விற்பனை செய்ததை அடுத்து, இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், "அக்கா" என்ற திரைப்படம், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள நிலையில் இந்த படமும், நேரடியாக நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் அறிவிப்புகளுடன் கூடிய வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
The matriarchy stands strong. A rebel plots their downfall ♟️🔥 A girl from Pernuru seeks revenge against the Akkas.
— Netflix India (@NetflixIndia) February 3, 2025
Akka is coming soon, only on Netflix.#Akka#AkkaOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/IRM287inu0
Sports. Drama. And a hat-trick of a cast. This pitch is all set for this test of life 🏏💥
— Netflix India (@NetflixIndia) February 3, 2025
TEST, a sports drama starring @ActorMadhavan, @NayantharaU, and #Siddharth is coming soon, only on Netflix.#TEST#TESTOnNetflix#NextOnNetflixIndia pic.twitter.com/1cRwMcBfsv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com