தமிழ்நாட்டுல மட்டும்தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியலை: 'மூக்குத்தி அம்மன்' டிரைலர்

  • IndiaGlitz, [Sunday,October 25 2020]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மூக்குத்தி அம்மன் திரைப்படம். வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியின் இடையே இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதுவரை பல பக்தி திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், இந்த படம் அரசியல் மற்றும் பக்தி ஆகியவை இணைந்த ஒரு ஆன்மீக அரசியல் படமாக உருவாகி உள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

போலி சாமியார்கள் மதத்தை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதும் அதனை கடவுளே நேரடியாக வந்து எப்படி தடுக்கின்றார் என்பதும் தான் கதை என்பது தெரிகிறது

குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும்தான் இன்னும் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியவில்லை என்றும் அதையும் இன்னும் ஐந்து வருடத்தில் நான் நடத்திக் காட்டுவேன் என்றும் ஒரு போலி சாமியார் சவால் விடும் காட்சி இன்றைய அரசியலை அப்படியே பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடதக்கது

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூக்குத்தி அம்மன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் ஆழமும் அழுத்தமும் இருப்பதால் இந்த படம் நிச்சயம் அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே ’எல்கேஜி’ என்ற வெற்றி படத்தை கொடுத்த ஆர்ஜே பாலாஜி முற்றிலும் வேறுபட்ட ஒரு திரைப்படத்தை கொடுத்து உள்ளார் என்பதும் இது ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

எனக்கே இது புதுசா இருக்கு: அனிதா குறித்து கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகிய அனிதாசம்பத், டைட்டில் பட்டம் வெல்வாரா இல்லையோ கண்டிப்பாக கண்டெண்ட் கொடுக்கும் போட்டியாளர் என்பதால்

ஸ்பேஸே இல்லாம பேசுறிங்க: அனிதாவை செமையாய் கலாய்த்த கமல்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அனிதா, பேச ஆரம்பித்தால் செய்தி வாசிப்பது போல் பேசி கொண்டே இருக்கின்றார் என்றும், வாயை திறந்தால் மூடவே மாட்டேங்கிறார்

சுமார் ரூ.100 கோடிக்கு இரண்டு அபார்ட்மெண்ட் வீடுகள் வாங்கிய பிரபல நடிகர்!

நடிகர் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் தான் பெரும்பாலும் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது தெரிந்தது

ஹிந்தியிலும் அடுத்தடுத்த பாகங்கள்? 'லட்சுமி பாம்' தயாரிப்பாளர் தகவல்!

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய நான்கு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

ஆங்கரின் வேலையை இங்கேயும் பார்க்காதீங்க: அர்ச்சனாவுக்கு குட்டு வைத்த கமல்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கலகலப்பாக அனைவரிடமும் பழகி வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் உடனே தானே முன் நின்று அந்த பிரச்சனையை தீர்க்க முயல்வதும்