நயன், விக்கி பார்சிலோனா பயணத்திற்கு அஜித் காரணமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு சென்றார்கள் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. நேற்று கூட கருப்பு கிளாமர் உடையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ’ஏகே 62’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு பார்சிலோனாவில் தான் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவுடன் இரண்டாவது தேன் நிலவுக்கு சென்ற விக்னேஷ் சிவன் அப்படியே ’ஏகே 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷனையும் பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தனுஷின் பாடலுக்கு செம நடனமாடும் சூப்பர் சிங்கர் மானசி: உடன் ஆடுபவர் யார் தெரியுமா?

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் மானசி,

ரஜினி பாடலுக்கு செமையாக தாளம் போடும் ப்ரியா பவானிசங்கர்: வைரல் வீடியோ

ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற சூப்பர்ஹிட் பாடலுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் தாளம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'யோஹான்' டிராப் ஆகி 12 வருடங்கள்: மீண்டும் இணையும் விஜய்-கெளதம் மேனன்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த 'யோஹான் அத்தியாயம் ஒன்று' என்ற திரைப்படம் டிராப் ஆகி 12 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜய், கௌதம்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அசோக்செல்வன்: நாயகியாக பிரபல நடிகரின் மகள்!

பா ரஞ்சித்தின் அடுத்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு

விஜய்யின் 'தளபதி 67': அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தளபதி விஜய்நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67' படத்தின் தகவல்கள் அவ்வப்போது