close
Choose your channels

பார்சிலோனாவில் பட்டொளி வீசி பறக்கும் இந்திய தேசிய கொடி: நயன் - விக்கியின் செம வீடியோ!

Monday, August 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தேசிய கொடியுடன் கூடிய தங்களது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சென்றுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் அங்கு தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு இருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவின் கேப்ஷனாக விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது தாய்நாடு தான் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.