close
Choose your channels

மீண்டும் வெளிநாடு பறந்த நயன் - விக்கி: இரண்டாவது ஹனிமூனா?

Friday, August 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்குச் சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் அதன் பின்னர் தாய்லாந்துக்கு தேனிலவு சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனிலவு முடிந்து வந்ததும் நயன்தாரா, ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்பதும், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் பிஸியாக இருந்தார்

இந்த நிலையில் தற்போது நயன் - விக்கி தம்பதிகள் ஸ்பெயின் சென்றுள்ளனர். அங்கு பத்து நாட்கள் அவர்கள் இருப்பார்கள் என்றும் அதன் பிறகு சென்னை திரும்பியவுடன் தங்களது பணியை தொடர்வார்கள் என்று கூறப்படுகிறது. நயன் - விக்கி தம்பதிகள் விமானத்தில் ஸ்பெயின் செல்லும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து நயன் விக்கி தம்பதியினர் இரண்டாவது தேனிலவுக்கு சென்றுள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.