close
Choose your channels

நயனுடன் கொச்சிக்கு பறந்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம்?

Sunday, April 11, 2021 • தமிழ் Comments

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததிலிருந்து காதலர்களாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் கடந்த 5 ஆண்டுகளாக காதலர்களாக இருக்கும் இவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்கள் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் காதலர்களாக நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாராவுடன் தனி விமானத்தில் கொச்சி சென்றதன் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நயன், விக்னேஷ் ஆகிய இருவரும் கொச்சி செல்வதன் காரணம் என்ன? என்ன விசேஷம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு நயன் மற்றும் விக்னேஷ் சிவன் விரைவில் பதில் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz