ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்.. 2 வருட தாமதம் ஏன்?

  • IndiaGlitz, [Sunday,October 22 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரித்த திரைப்படம் ஒன்று, இரண்டு வருடங்களாக திரையரங்குகளில் வெளியிட முயற்சித்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த படம் உலகின் பல நாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் தலையிட நயன்தாரா பெரும் முயற்சி செய்த நிலையில் தற்போது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும், இந்த படம் அக்டோபர் 27ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ் வினோத் குமார் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையில் பார்த்திபன் ஒளிப்பதிவில் உருவான இந்த படம் ஒரு குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவுகளை கூறும் உண்மை சம்பவத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு.. தமிழ் நடிகரின் மகள் நெகிழ்ச்சி பதிவு..!

தமிழ் நடிகரின் மகள் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினியிடம் இருந்து தனது தந்தைக்கு அழைப்பு வந்ததாக நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கைதி', சர்தார்' படங்களை அடுத்து இன்னொரு 2ஆம் பாகம் படம்.. கார்த்தியின் மாஸ் திட்டம்..!

கார்த்தி நடித்த 'கைதி' மற்றும் சர்தார்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி

துர்கா தேவியாக மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நவராத்திரி ஸ்பெஷலாக நடிகை ரம்யா பாண்டியன் துர்கா தேவியாக மாறி எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

3 நாட்களில் இத்தனை கோடியா? தெலுங்கிலும் மாஸ் வசூல் செய்யும் 'லியோ'

தளபதி விஜய் நடித்த 'லியோ'திரைப்படம் கடந்த வியாழன் என்று வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதல் நாளே உலகம் முழுவதும் 148 கோடி ரூபாய்க்கு

மீண்டும் ஒரு பிரபலத்தின் படத்தில் வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

 சமீப காலமாக நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் என்பதும் அவர் வில்லனாக நடித்த 'மாநாடு' 'டான்'  'வாரிசு' 'மார்க் ஆண்டனி' ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன என்பதை பார்த்தோம்.