close
Choose your channels

நயன் - விக்னேஷ் கலந்து கொண்ட விழா: வைரல் புகைப்படம்!

Thursday, February 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பதும் விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்களை அவர்கள் தயாரித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் திரைப்படங்களில் ஒன்று கூழாங்கல். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா என்ற விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கூழாங்கல்’ திரையிடப்படுகிறது

இதனையடுத்து நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.