தனி விமானத்தில் ஜோடியாக கொச்சின் சென்ற நயன் - விக்கி: வைரலாகும் புகைப்படங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜோடி நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது தெரிந்ததே. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் இருவரும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மற்றும் கோவா, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட உள்நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்வார்கள் என்பதும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுற்றுப்பயணங்களின் புகைப்படங்களும் அவ்வப்போது வைரல் ஆகி வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளனர். கொச்சின் விமான நிலையத்தில் இருந்து விக்னேஷ் சிவன் முதலில் இறங்கி, நயன்தாராவை கைப்பிடித்து இறக்கி விடுவது போன்ற புகைப்படமும், இருவரும் விமான நிலையத்திலிருந்து காரை நோக்கி நடந்து செல்லும் புகைப்படமும் வைரல் ஆகி வருகின்றன.

நயன்தாரா தனது காதலருடன் கொச்சினில் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னர் அவர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நயன்தாரா நடித்து முடித்துள்ள ’நெற்றிக்கண்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதுதான் விஜய் பட டைட்டிலா? சமூக வலைத்தளத்தில் பரவும் விஜய்யின் புதிய படத்தின் பெயர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு தொடங்க அனுமதி

கட்டிப்பிடிக்கும் தொழிலில் பெண்கள்? ஒருமணி நேரத்திற்கு ரூ.7,000 வசூலிக்கும் ஆச்சர்யம்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மருத்துவ முத்தம் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

பூஞ்சை நோய் பரவுவது எப்படி? வதந்திகளுக்கு எளிமையான விளக்கம்!

கொரோனா பாதிப்பை அடுத்து பல இணைநோய்களும் மனிதர்களைத் தாக்கி வருகின்றன.

மதுரை மதுப்பிரியர்கள் சாதனை....! கோடிகளில் குவியும் டாஸ்மாக் கல்லா...!

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக, மது விற்பனை துவங்கியதையடுத்து, மதுரையில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சஞ்சீவ்க்கும் எனக்கும் இருக்கும் உறவுமுறை: வனிதா அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா குறித்த சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் என்பதும், அதற்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்து