குடும்பத்துடன் நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. க்யூட் உயிர், உலகம் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் திரை உலகினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நயன்தாரா, இந்த ஆண்டும் தனது குடும்பத்தினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் உயிர் உலகம் ஆகிய குழந்தைகள் மற்றும் தனது அம்மாவுடன் நயன்தாரா கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக நயன்தாராவின் அம்மா, நயன்தாரா மற்றும் நயன்தாராவின் குழந்தைகள் என மூன்று தலைமுறைகள் இணைந்து கொண்டாடிய கிறிஸ்துமஸ் பண்டிகை புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் நயன்தாராவின் குழந்தைகளான உயிர் மற்றும் உலகம் ஆகிய இருவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது மாதவனுடன் ’டெஸ்ட்’ என்ற படத்திலும், ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அட்லி-அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஹிட் உறுதி..!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில்

'மனமே நீ நிஜம் தானா': அமீர் படத்திற்கு புரமோஷன் செய்த சிம்பு..!

அமீர் நடித்த அடுத்த படத்தின் சிங்கிள் பாடலை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனம் இருக்குது: பிரபல நடிகரின் பதிவு..!

தனுசுக்கு டைரக்‌ஷன் மேல ஒரு வெறித்தனமான அன்பு இருக்கிறது என்றும், அவரது இயக்கத்தில் உருவான 'D50' படம் நிச்சயம் சர்வதேச அளவில் கவனத்தை பெறும் என்றும் பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விக்ரம் போகும்போது ஏன் அப்படி நடந்துகிட்டிங்க.. அர்ச்சனா கேள்விக்கு மாயாவின் ஆவேச பதில்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விக்ரம் சரவணன் எலிமினேஷன் ஆனபோது மாயா நடந்துகொண்ட விதம் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் கூட மாயாவை அழைத்து இனிமேல்

எனக்கு தடை நீங்க தான்.. நான் செஞ்சது புல்லின்னா நீங்க செஞ்சதும் அதுதான்: பிக்பாஸை குறை சொன்ன போட்டியாளர்..!

பிக் பாஸ் தான் எனக்கு தடையானவர், நான் மற்றவர்களுக்கு செஞ்சது புல்லி என்றால் நீங்கள் எனக்கு செய்தது புல்லி என போட்டியாளர் ஒருவர் பிக் பாஸ் மீது குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.