ஷாருக்கானுக்காக கொள்கையை மாற்றினாரா நயன்தாரா? திடீரென மும்பை சென்ற ரகசியம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அஜித் போலவே தான் நடிக்கும் எந்த படத்தின் புரமோஷனுக்கும் செல்ல மாட்டார் என்பதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த படங்களில் நடித்த போது கூட அவர் புரமோஷனுக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன. மே முதல் வாரத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அதன் பிறகு புரமோஷனையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென நேற்று நயன்தாரா மும்பை சென்றுள்ளார். மும்பையில் நடைபெறும் ’ஜவான்’ படத்தின் புரோமோஷனில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

’ஜவான்’ படத்தின் புரமோஷனில் ஷாருக்கான், தீபிகா படுகோன், அட்லி, உள்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதால் நயன்தாராவும் ஒரு சில புரமோஷனில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. மேலும் மும்பைக்கு நேற்று நயன்தாரா சென்ற வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இவ்வளவு விலையா? புதிய தொழில் துவங்கிய ஷாருக் மகன் ஆர்யன்கானை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் புதிய ஆடை விற்பனை நிறுவனம் ஒன்றை துவங்கியிருந்தார்

டூப் இன்றி அந்தரத்தில் பறந்து ஸ்டண்ட் காட்சியில் நடித்த பிரபல நடிகை.. வைரல் வீடியோ..!

பிரபல தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு அந்தரத்தில் பறந்து டூப் இன்றி ஸ்டண்ட் காட்சியில் தைரியமாக நடித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பா ரஞ்சித் - விக்ரமின் 'தங்கலான்' : சூப்பர் அப்டேட் கொடுத்த ஸ்டுடியோ க்ரீன்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த 'தங்கலான்' திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தனது சமூக

கடும் சோதனையில் பூத்த கனவு… பரதநாட்டியத்தில் கலக்கும் திருநங்கை பொன்னி!

கலை எல்லோருக்கும் சமமானது என்று சாதித்து காட்டியிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை பொன்னி

கை கொடுத்தது தப்பா? மைதானத்திலேயே மோதிக்கொண்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் காம்பீர்..!

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில்