ஹனிமூன் குறித்து நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் உறவினர்கள் திருமணத்திற்கான பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஹனிமூன் இப்போதைக்கு வேண்டாம் என்று நயன்தாரா அதிரடியாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

திருமணத்திற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் கேரளா செல்ல இருப்பதாகவும் அங்கு நயன்தாரா புத்துணர்ச்சிக்காக சில ஆயுர்வேத சிகிச்சை எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் ’அஜித் 62’ படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியையும் கேரளாவிலேயே முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’அஜீத் 62’ படத்திற்கான பணிகள் அனைத்தையும் முடித்தவுடன், நயன்தாராவின் புத்துணர்ச்சி சிகிச்சை முடிந்தவுடன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் செல்வார்கள் என்றும், ஹனிமுன் முடிந்து திரும்பியவுடன் ‘அஜித் 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகம் முழுவதும் அஜித் திறக்கும் ஹோட்டல்கள்: ரசிகர்கள் ஆச்சரியம்!

தமிழகம் முழுவதும் ஹோட்டல்கள் திறந்து அதை நிர்வாகம் செய்யும் ஒரு கேரக்டரில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா படத்தில் வில்லனாக நடிக்கும் இயக்குனர்!

நயன்தாரா நடித்த 'இமைக்காநொடிகள்' திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்த நிலையில் தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் இயக்குனர் ஒருவர்

'விக்ரம்' படத்தில் பிரமாண்டமான இசை வெளியிட்டு விழா: எங்கே தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இந்த படம் வரும் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக

சிம்புவின் 'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சிம்பு தனது அடுத்த படமான 'பத்து தல' படத்தின்

சாக்கடையில இறங்கினாத்தான் உண்மை கிடைக்கும்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி டிரைலர்

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நெஞ்சுக்கு நீதி'. இந்த படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக