நயன்தாரா படத்தை ரீமேக் செய்யும் 'தோனி' இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,March 31 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்த மலையாள் திரைப்படம் 'புதிய நியமம்'. பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதைதான் இந்த படம். இந்த படத்தில் நயன்தாரா, வாசுகி என்ற கேரக்டரில் அபாரமாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தை இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே 'தோனி' உள்பட ஒருசில வெற்றிப்படங்களை பாலிவுட்டில் இயக்கியுள்ளார். மம்முட்டி மற்றும் நயன்தாரா கேரக்டரில் நடிக்க பாலிவுட்டில் பிரபல நடிகர், நடிகையை இவர் தேர்வு செய்திருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை அவர் அறிவிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

த்ரிஷ்யம், சிங்கம் உள்பட பல தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகியிருக்கும் நிலையில் 'புதிய நியமம்' படமும் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது