'பிகில்' கேப்டனுக்கு நயன்தாரா கொடுத்த பிறந்த நாள் பரிசு!

  • IndiaGlitz, [Saturday,November 02 2019]

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் விஜய்யின் இரண்டு கேரக்டர்களில் ஒன்று மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிகில் படத்தின் மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அமிர்தா அய்யர் நடித்திருந்தார் என்பதும் அவருக்கு இந்த படத்தால் வாழ்த்துக்கள் குவிந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிகில் கால்பந்து அணியின் கேப்டன் அமிர்தா அய்யரின் பிறந்த நாள் பரிசாக வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். இந்த வாட்சை கையில் கட்டியவாறு கொடுத்த போஸ் ஒன்றின் புகைப்படத்தை அமிர்தா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நயன்தாராவுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

விஜய் ஜேசுதாஸ் நடித்த ‘படைவீரன்’ என்ற படத்தில் அறிமுகமானாலும் ‘பிகில்’ திரைப்படம் அமிர்தாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது