நயன்தாராவின் குஜராத்தி திரைப்படம் விஜய்சேதுபதி படத்தின் ரீமேக்கா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது தனது காதலருடன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வரும் நிலையில் முதல் முறையாக ஒரு குஜராத்தி திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தை தேசிய விருது பெற்ற மணிஷ் சைனி என்பவர் இயக்க உள்ளதாகவும் மல்ஹர் தக்கார் மற்றும் மோனல் கஜார் நடிப்பில் இந்த படம் உருவாக இருப்பதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு ‘சுப் யாத்ரா’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.,

இந்த நிலையில் இந்த படம் தமிழில் வெளியான விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படத்தின் குஜராத்தி மொழி ரீமேக் என்று தற்போது தெரிய வந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான ’ஆண்டவன் கட்டளை’ என்ற திரைப்படம் குஜராத் மொழியில் ரீமேக் செய்யப் படுவதாகவும் இந்த படத்தைதான் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

கமல்ஹாசன் வீட்டிற்குள் மீண்டும் புகுந்த கொரோனா: இம்முறை யாருக்கு தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பதும் சில நாட்களில் அவர் குணமாகி வீடு

சிம்புவை பார்த்ததும் துள்ளி குதித்த போட்டியாளர்கள்: நிரூப் முக்கிய சந்தேகம்!

24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று முதல் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த முதல் புரமோ சில மணி நேரங்களுக்கு வெளியாகி

பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த டிடி: எந்த கேரக்டரில் தெரியுமா?

விஜய் டிவி பிரபலமான டிடி என்கிற திவ்யதர்ஷினி ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

புது காதலருடன் ரொமான்ஸ்: திருமணமான தமிழ் திரைப்பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், தனுஷ் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த தமிழ் திரைப்பட நடிகை  புது காதலனுடன் ரொமான்ஸ் செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'அஜித் 61' படத்தில் இணையும் பிரபல ஹீரோ?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழ் ஹீரோ ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.