நயன்தாராவின் 'டோரா' ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,April 03 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த 'டோரா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களில் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது.

நயன்தாராவின் 'டோரா' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 16 திரையரங்குகளில் வெளியாகி 195 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் சென்னை ஓப்பனிங் வசூலாக ரூ.71,97,160 செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளது.

மாஸ் ஸ்டார் இல்லாமல் பெரிய டெக்னீஷியன்கள் இல்லாமல் நயன்தாராவின் நடிப்புக்காகவே இந்த படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓப்பனிங் வசூலில் குறி தவறாத 'கவண்'

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய 'கவண்' திரைப்படம் ஒப்பனிங் வசூலை குறிதவறாமல் அடித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று காலை நடந்தது. இந்த தேர்தலில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.  இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால், கே.ஆர் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகள் போட்டியிட்டன

சில்க் ஸ்மிதாவுக்கு ஆதார் அட்டை? என்னதான் நடக்குது

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது மிகவும் முக்கியம் என்பதும், ஆதார் அட்டை இல்லையென்றால் பல அடிப்படை சலுகைகளை இழக்க நேரும் நிலையும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஆதார் அட்டையை பெற்று வருகின்றனர்...

ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்த ஆனந்த யாழ்'. முத்துகுமாருக்கு புகழாரம்

மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள் எழுதிய 'ஆனந்த யாழ்' என்ற பாடல் ஒவ்வொரு தந்தையின் மனதிலும் ஊடுருவி ஒரு இன்ப அனுபவத்தை கொடுத்தது என்பதை அனைவரும் அறிவர். இந்த ஒரே ஒரு பாடல் மட்டும் தயாரிப்பாளருக்கு ரூ.1.25 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது...

'தளபதி 61' டைட்டில்: ஆறில் ஒன்றுதான் 'மூன்றுமுகம்'. படக்குழுவினர் விளக்கம்.

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'மூன்று முகம்' என கடந்த சில மணி நேரங்களாக சமூக இணையதளங்களில் ஒரு போஸ்டர் மிக வேகமாக பரவி வருகிறது. எனவே 'தளபதி 61' படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்பட்டது...