நயன்தாரா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஆர்கே செல்வமணி

  • IndiaGlitz, [Saturday,April 04 2020]

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நடிகர்கள் பெரும்பாலானோர் தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த போதிலும் நடிகைகள் மிகச் சிலர் மட்டுமே இதுவரை நிதி உதவி செய்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ள நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் ரூபாய் 20 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக கொடுத்துள்ளார்

நயன்தாராவின் இந்த உதவிக்கு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட தொழிலாளர்கள் மேல் பரிவும் பாசமும் கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் நடிகை நயன்தாரா அவர்கள் ரூபாய் 20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு கைகொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நடிகை நயன்தாராவுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்

More News

கொரோனா வைரஸ் எதிரொலி: ஓரின திருமணத்தை ஒத்திவைத்த கிரிக்கெட் வீராங்கனை

https://www.dinamani.com/sports/sports-news/2020/apr/04/south-africa-woman-cricketer-lizelle-lees-marriage-on-hold-owing-to-coronavirus-pandemic-3394277.html

யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு: புதிய தேதி என்ன?

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும், அவரது குலதெய்வம் கோவிலில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமான

நன்றி தேவையில்லை, உத்தரவு போடுங்கள்: முதல்வருக்கு பிரபல நடிகரும் வேண்டுகோள் 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

போலீசார்களுக்கு பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த ஊரடங்கு உத்தரவை மக்கள் சரியாக கடைபிடிக்க வேண்டும்

தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இருவர் பலி!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.