ஸ்டார்ட் பண்ண இதுதான் சரியான நேரம்.. நயனின் மறைமுக மெசேஜ் என்னவாக இருக்கும்?

  • IndiaGlitz, [Wednesday,September 13 2023]

நடிகை நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விரைவில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது கணவர் விக்னேஷ் சிவனின் டீசர்ட்டில் ’ஸ்டார்ட் பண்ண இதுதான் சரியான நேரம்’ என்ற வார்த்தைகள் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இதிலிருந்து அவர் மறைமுகமாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதை கூறுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்க இருந்த ’அஜித் 62’ திரைப்படம் டிராப் ஆன நிலையில் வேறு எந்த படத்தையும் அவர் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படத்தை விக்னேஷ் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தை தான் நயன்தாரா தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

எனவே மீண்டும் நயன் மற்றும் விக்கி இணையும் படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவந்து விடும் என்றும் அது நயன்தாரா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா ஜெயம் ரவியுடன் ’இறைவன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் மாதவனுடன் ’டெஸ்ட்’ மற்றும் நயன்தாராவின் 75வது படம் என 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது