மூன்றே நாட்களில் ரூ.6 கோடியை நெருங்கிய 'அறம்'

  • IndiaGlitz, [Monday,November 13 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதையும் குறிப்பாக இந்த படம் கடந்த மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1 கோடியை தாண்டி வசூல் செய்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பட்ம் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களில் ரூ.6 கோடி வசூலை நெருங்கிவிட்டது. அதாவது ரூ.5.6 கோடி வசூல் செய்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சென்னையில் ரூ.1.02 கோடியும் செங்கல்பட்டில் ரூ.1.9 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.32 லட்சமும், சேலம் பகுதியில் ரூ.24 லட்சமும் வசூல் செய்துள்ளது.

இதேபோல் கடந்த வாரம் வெளியான இன்னொரு படமான உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும்' திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.6.4 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.76 லட்சமும், கோவையில் ரூ.84 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.1.42 கோடியும் வசூல் செய்துள்ளது

மேலும் கடந்த 3ஆம் தேதி வெளியான சித்தார்த் நடித்த 'அவள்' திரைப்படம் 10 நாட்களில் சுமார் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படம் சென்னையில் ரூ.1.86 கோடியும், கோவையில் ரூ.1.9 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.4 கோடியும், வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.