நயன்தாரா அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோல்டு’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ’நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது தெரிந்ததே. இந்தநிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் ‘கோல்டு’. இந்த படத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 1ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீஸர், டிரைலர், சிங்கிள் பாடல் என எந்தவிதமான புரமோஷனும் இல்லாமல் நேரடியாக படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ’கோல்டு’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்தத் திரைப்படம் 165 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பேண்ட் அணிந்து புடவை கட்டிய நடிகை சீதா.. வைரலாகும் மாடர்ன் போட்டோஷூட்!

பேண்ட் அணிந்து அதன் மேல் புடவை அணிந்து அதற்கு மேல் கோட் அணிந்த நடிகை சீதாவின் மாடர்ன் போட்டோஷூட் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

கணவனை 22 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி… ஏன் இந்தத் தண்டனை தெரியுமா?

டெல்லியில் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய ஷரத்தா வாக்கர் எனும் இளம் பெண்ணை அவரது காதலர் அப்தாப் அமீன்

ராம் சரண் தேஜாவின் அடுத்த பான் - இந்தியா திரைப்படம் அறிவிப்பு!

 பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா, இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' என்ற பான் - இந்தியா திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள

தனுஷின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: இயக்குனர் , தயாரிப்பாளர் யார்?

பிரபல நடிகர் தனுஷ், பிரபல இயக்குனர் சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணையும் மும்மொழி படம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது.

திருமண வாழ்வில் 10வது ஆண்டை கொண்டாடும் பிரபல நடன ஜோடி !!

பிரபல நடன இயக்குநர்கள் ஷோபி மாஸ்டர்  மற்று லலிதா ஷோபி மாஸ்டர் திருமண வாழ்க்கையில் 10 வது ஆண்டை கடந்திருக்கிறார்கள். திரையுலகில் நடன இயக்குனர்களாக பலருக்கு முன்னுதாரமாக இருக்கும்